274 சிவதரிசனம்  ஆன்மீகப் பயணம் - 2 

                                                நாள் : 16.06.2024 ஞாயிறு

 ஓம் நமச்சிவாய


    சைவ குரவர்கள் அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் ஆகியவரின் தேவார பாடல் பெற்ற 274 சிவ தளங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற மாபெரும் கனவுக்காக ஆன்மீகப் பயணத்தில் இரண்டாவது பகுதியாக ஓசூரில் இருந்து கொங்கு நாட்டில் உள்ள 4 மாவட்டங்கள் அதாவது கோவை திருப்பூர் ஈரோடு நாமக்கல் இங்க இருக்கக்கூடிய ஆறு சிவ தலங்களுக்கு ஒரே நாளில் சென்று இறையருள் தரிசனம் செய்ய முடிவு செய்து 15.06.2024 ம் தேதி இரவு 10 மணிக்கு ஓசூரில் இருந்து ராயக்கோட்டை வழியாக  நான் (பாலசந்தர்), சரவணன் , சுந்தரபாண்டியன், ஜெயமணி மற்றும் வேலு ஆகியோர் எனது கியா சோனெட் காரில் கிளம்பினோம். காலை நாலு மணிக்கு  கோவையை சென்றடைந்தோம். காலை கடனை முடிப்பதற்கு சரியான இடத்தை தேடி அலைவதற்கு பதிலாக எளிதாக காலை கடமை முடிப்பதற்கு ஏதுவாக நாங்கள் ரயில்வே ஸ்டேஷனை தேர்வு  செய்தோம்.ரயில்வே ஸ்டேஷன்ல   நடைபாதை சீட்டு வாங்கிட்டு முதல் வகுப்பு தங்கும் அறையில் 25 ரூபாய் பணம் கொடுத்து அங்கு குளிச்சிட்டு டிரஸ் எல்லாம் சேஞ்ச் பண்ணிட்டு அங்கிருந்து  ஆன்மீகப் பகுதியின் தொடக்கம்.

மூல முதல் கடவுள் ஈச்சனாரி விநாயகரயை  வழிபட ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை வழியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு காலை 5. 45க்கு வந்தடைந்தோம்

அந்த தலத்தில் விநாயகர் மட்டும் மூலவராக இருக்கிறார். உப தெய்வங்கள்  எதுவுமே கிடையாது 2000 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் சென்று கொண்டிருந்த இந்த விநாயகர் சிலை வண்டி அச்சு முறிந்து பாதியிலேயே வண்டி நின்று விட நின்ற வண்டியை முயற்சி செய்து கிளப்பும்போது சிலையை நகர்த்த முடியாமல் போக விநாயகர் பெருமான் இங்கேயே  தங்கி விட்டதாக ஐதீகம் உள்ளது .இங்கு 28 நட்சத்திரங்களுக்கு அலங்காரம் செய்வது சிறப்பு 6 மணிக்கு விநாயகரை வழிபட்டு தரிசனம் பெற்று அங்கிருந்து 6.15க்கு ஈச்சனாரியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டரில் உள்ள 

போரூர் பட்டீஸ்வரத்தில் உள்ள பல அதிசயங்கள் அடங்கிய சுமார் 2000 ஆண்டு பழமையான போரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தை 6:15 மணிக்கு அடைந்தோம். கோவிலின் நுழைவுவாசல் திறக்கப்படவில்லை.சிவனடியார்கள் வாசலில் முன்னாடி தேவாரப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள் அங்கு நின்னு அதை  ஆச்சரியத்தோடு பார்த்து சிவனடியார்களை வணங்கி விட்டு கோயில்   திறக்கப்பட்டவுடன் உள்ளே சென்றோம். கோயில் உள் பிரகாரம் வலம் வர பின்புறமுள்ள முருகன் கோயில் மட்டும் திறந்திருந்தது இதனை தூரத்தில் இருந்து வணங்கி விட்டு  அப்படியே சுற்றி வரும்போது  சிவனடியார்கள் கூடியிருந்தார்கள் என்னவென்று பார்த்தால் திருப்பள்ளியெழுச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது
                                                                                  
எனக்கு ரொம்ப ஆச்சரியம் நான் இதற்கு முன்பு இது போல் பார்த்தது கிடையாது அம்பாள் பச்சை நிற நாயகி அம்பாளுடன் பள்ளியறையில் இருந்த சிவபெருமான் பள்ளியெழுச்சி கொண்டு பல்லாக்கில் ஏறி கருவறைக்கு பவானி  சென்றார்.பல்லாக்கில் தூக்கி  வரும் வழியில்  அடியார்கள் திருப்புகழ் பாட உள்பிரகாரத்தில் ஊர்வலமாக வரும் வழி முழுக ஓம் நமச்சிவாய  என்ற மந்திரத்தை  முழங்கிக் கொண்டு  வழி நெடுகிலும் சிவனார்கள் தரை யில் 
விழுந்து வழங்குவதை வணங்குவதை பார்த்து புள்ளரிப்புடன் பார்த்துக் கொண்டு கருவறைக்கு சென்று இறைவனை கண்ணார தரிசனம் செய்து பின்பு தாயார் பச்சைநாயகி அம்பாளை தரிசனம் செய்தோம் .பிறகு நடராஜர் ஆடி முடிந்த பிறகு உள்ள நிலையில் தரிசனம் செய்துவிட்டு கோயிலின் அழகு சிற்பங்கள்  மற்றும் மாடத்தில் காமதேனு புற்றில் பால் சொரியும் காட்சி அடங்கிய படம் ஆகியவற்றை தரிசனம் செய்து கோவிலில் இடதுபுறம் இரண்டு பெருக்கல் தள்ளி உள்ள  இரவா பனை மரம் காண சென்றோம் .

அங்கு
பல பனை  மரங்கள் இருந்தாலும் ஒரு பனை மரத்தில் இரவா பனை என்று எழுதப்பட்டிருந்தது அதை சுற்றி வந்து முத்தமிட்டு  வணங்கி வரும் வழியில் உள்ள பழமை  வாய்ந்த சிவா ஆலயம் சென்று அங்கு செந்நிலத்தில் இருந்த சிவனை வணங்கி அதன் பெருமைகளை சிவனடியார்  கூற  இறைவனின் ஆவுடைய ஒரே கல்லில் ஆனதும் இங்கு சிவத்தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றதாகவும் கூறி அடியார் இறைவன் மீது சாத்தப்பட்ட சந்தனத்தை வழங்கினார். பின்பு வெளியே வந்து ஒரு காபி குடித்துவிட்டு அங்கிருந்து பார்த்தால்  பிரம்மாண்டமான இரண்டு மூடிய நிலையில் தேர் பத்திரமாக மூடப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது.பின்பு கோயிலின் முன்புறம் கொடி மரத்திற்கு இடது புறம் உள்ள பிரவா புளியமரம் உள்ளது அதை பார்த்துவ தரிசனம் செய்து பட்டீஸ்வரன் பச்சைநாயகி அம்மனுக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து காலை 9:30 மணிக்கு அடுத்த  தலமான அவிநாசிக்கு கிளம்பினோம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் இருக்கும் இழந்ததெல்லாம் மீட்டு தரும் தேவார பாடல் பெற்ற திருத்தலமான அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு 48 கிலோ மீட்டர் கடந்து  காலை 10:15 மணிக்கு கோயிலை அடைந்தோம். கோவிலை சுற்றி வந்து அங்கிருந்த முருகன் காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களை தரிசனம் செய்து  உள்பிரகாரத்தில் வந்தால் திரை போடப்பட்டது அடடா என்னடா திரை போட்டு விட்டார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது 15 நிமிட காத்திருப்பதற்குப் பிறகு  

அவிநாசி
அப்பர் அற்புத தரிசனம் அனைத்து பூஜைகளும் செய்து அனைத்து தீப விளக்குகளிலும் ஆராதனை செய்த அற்புதமான அந்த காட்சியை காண முடிந்தது அறிய பொருளே அவினாசி அப்பா என்ற வாசகத்துடன் உள்ளே அருள் கொடுக்கும் அவிநாசி அப்பர் அதன் பிறகு பெருங்கருணை நாயகி அம்பாளை தரிசனம் செய்து கர்ணாம்பிகை அருளை பெற்று எதை கேட்டாலும் தரும் தளத்தில் திவ்ய தரிசனம் செய்து சுந்தரர் முதலையுண்ட ஒரு பாலகனை பதிகம் பாடி மீட்ட தளம் .இதன் கொடி மரத்தில் முதலை வாயிலிருந்து சிறுவன் வரும் காட்சி மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. அதை கண்டு வரலாற்றில் கூறப்பட்ட குளம் தற்போது காண முடியவில்லை. அன்று சுப முகூர்த்த நாள் என்பதால் ஊர் மக்கள் பால்குடம் காவடி எடுத்து கொடிமரம் முன்பு கிராம மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் இந்த கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வரும்போது எனக்கு வீட்டில் இருந்து பல போன் கால்கள் வந்திருந்தது. வீட்டின் கேட் சாவி இரண்டையுமே  இந்த யாத்திரை கிளம்பும்போது எடுத்துட்டு வந்துட்டேன் மறதியாக .சாவி எங்கே என்று கேட்டு வீட்டில் இருந்து மனைவி மகன் ... வீட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை அன்று எனது மகன் விடுமுறை முடிந்து கோயம்புத்தூருக்கு காலேஜுக்கு செல்ல சில பொருட்களை வாங்கும் கட்டாயமும் இருந்தது அவர்களுக்கு.நானும் வேறு சாவி உள்ளதா என்று கூறி பாருங்க என்று கூறியும் கடைசி இடத்திலும் தேடியும் அந்த கேட்டின் சாவி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை. நாங்கள் கேட்டை விட்டு வெளியே வர முடியாது நீங்கள் வரும் வரை உள்ளே தான் இருக்க வேண்டும் என்று கூறி ரொம்ப வருந்தினார்கள் பூட்டை உடைக்கவும் சம்மதிக்கவில்லை நான் மிகுந்த மன வருத்தத்தோடு என்னடா இப்படி ஆகிவிட்டது என்று நொந்து கொண்டு அவிநாசியை விட்டு  அடுத்த தளத்திற்கு கிளம்பினோம். அடுத்த தலைமுறை திருமுருகன்பூண்டி .

அவிநாசியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமுருக பூண்டியார் கோவிலுக்கு வந்தடைந்தோம்.திருமுருகன்பூண்டி வந்து அடைந்தபோது அந்த ஊரில் கும்பாபிஷேகம்  போல ஒரே கூட்டமாக இருந்தது காரினை நிறுத்துவதற்கு கூட இடம் கிடைக்கவில்லை அதனால் முக்கிய சாலையில் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தரிசனம் பார்ப்பதற்காக கிளம்பினோம். நாங்கள் திருமுருகன்பூண்டி சிவன் கோயிலில் தான் கும்பாபிஷேகம் போல என்று நினைத்துக் கொண்டு அந்த கோயிலை நெருங்கினோம் அங்கே கோவில் கும்பாபிஷேகம் சற்று நேரத்தில் முன்பு தான் நடைபெற்று முடிந்திருந்தது சரி நல்லது என்று ஒரு வழியாக உள்ளே நுழைந்தால் அது ஒரு வரதராஜ பெருமாள் கோயில் நான் உள்ளே நுழையும்போதே சந்தேகம் இது பெருமாள் கோயில் மாதிரி தான் இருக்கு இது சிவன் கோயில் இல்லையே என்று அதன் பிறகு பார்த்தால் அந்த கோவில் புதிதாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருந்தது திவ்யமாக எதிர்பாராத தரிசனமாக பெருமாள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சியுடன் எங்களது பயணத்தின் முக்கிய கோயிலாக உள்ள திருமுருக பூண்டியார் கோவிலுக்கு வழிகேட்டு நடந்து செல்லும்போது மற்றவர்களிடம் நீங்கள் கோவிலுக்கு செல்லுங்கள் நான் வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு உங்களுடன் வந்து இணைந்து கொள்கிறேன் என்று கூறி நானும் சுந்தரபாண்டியனும் காரினை ஒரு பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு சிறிது நேரம் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது சாவியை எடுத்து வந்து விட்டோமே அவர்கள் வீட்டுக்குள்ளே இருப்பார்களே கூட்டையும் உடைக்க வேண்டாம்  என்கிறார்களே என்ற ஒரு கவலையில் இருந்தாலும் முதலில் 

இறைவனை
தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று கூறி நேராக உள்ளே சென்று இறைவனை தரிசனம் செய்தோம் .இறைவன் திருமுருக நாத சுவாமி கோயில் அடைந்து பார்த்தால் ரொம்ப பழமையான கோயில் என்பது ரொம்ப தெளிவாக தெரிந்தது பிரகாரம் சுற்றி வந்து தாயார் முயங்கு பூண்முலை வள்ளியம்மை அம்பாளை தரிசனம் செய்துவிட்டு பின்பு மூலவர் சன்னதி அடைந்து திவ்யமாக உள்ள இறைவனை தரிசனம் செய்து அப்படியே இடது புறத்தில் 5 அடி உயரத்தில் சண்முகருக்கான சன்னிதியை கண்டோம். சண்முக சன்னதி  5 அடி உயரத்தில்  முருகன் அஞ்சுமுகம் முன் பக்கமும் பின்பக்கம் ஒரு முகம் உள்ளபடி காட்சி தருகிறார். முருகன் சூரனை கொன்று அதனால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷத்தை போக்கிக் கொள்ளும் பொருட்டு இங்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்து வழிபட்டார் என்பது ஐதீகம் அதுமட்டுமில்லாமல் சுந்தரர் பெற்ற பரிசு பொருளுடன் இங்கு வந்து தங்கி இருக்கும் போது இறைவன் சிவகனங்களை ஏவி பரிசு பொருளை கொள்ளையடிக்க செய்ததால் கவளை அடைந்த சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடம் முறையிட்டார். பாடலில் இறைவன் இறைவியை தீட்டி என்னை காக்காமல் எதற்கு இங்கு இருக்கிறீர்கள் என்பது போல பாடியதால் இறைவன் அனைத்து பொருட்களையும் திரும்ப கிடைக்க செய்தார். பல சிற்பங்கள் இந்த மிக நேர்த்தியாக உள்ளது .இங்கு விநாயகருக்கு முன்பு மூஞ்சூறு பதிலாக இங்கு நந்தி இருந்தது புதிய அனுபவமாக இருந்தது. இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு நன்றி கூறி வெளியே வந்து  போட்டோ எல்லாம் எடுத்து முடித்த பிறகு பார்த்தால் வீட்டில் இருந்து போன் கால் சாவி கிடைத்து விட்டது என்று  என்ன ஒரு அதிசயம் என்ன இறைவனின் கருணை என் மனதில் ஓர் ஓரத்தில் இருந்த மனச்சுமையை அறிந்து எனக்கு அருள் புரிந்து இறைவன் எனக்கு அந்த சாவியை கிடைக்கச் செய்தது மிகப்பெரிய ஒரு அதிசயம்

இது இறைவனின் கருணையே நன்றி வேறு ஏதும் இல்லை. இந்த ஆச்சரியம் நடக்கவில்லை என்றால் இதன் பிறகு பார்க்க இருக்கும் எல்லா கோயிலும் என் மனதில் ஓரத்தில் அந்த கவலை இருந்திருக்கும் அதை அறிந்த இறைவன் உடனடியாக எனக்கு இந்த அற்புதத்தை நிகழ்த்தி மன அமைதியை கொடுத்தார் . பக்தர்கள் மனதில் ஏதாவது ஒரு கவலை ஏற்பட்டால் அதை உடனடியாக இறைவன் சரி செய்து கொடுப்பார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி. இறைவனுக்கு நன்றி கூறி நண்பர்களிடம் பகிர்ந்து பிறகு தான் என் மனம் இலகுவானது அப்போது மணி 11:30 இருக்கும் காலை உணவு இன்னும் சாப்பிடவில்லை கும்பாபிஷேகம் என்பதால் அன்னதானம் நீண்ட வரிசை உணவு விடுதியும் அதிகமாக இல்லை ஒரு வழியாக ஒரு உணவகத்தை கண்டு மதியம் சாப்பாட்டினை முடித்துக் கொண்டு அங்கிருந்து கொடுமுடி செல்லும் வழியில் உள்ள சென்னிமலை முருகனை காண வேண்டும் அங்கு முடி காணிக்கை தர வேண்டும் என்ற திட்டம் , திட்டம் தயாரிக்கும் போது இருந்தது. ஆனால் கால நேரம் ஒத்து வருமா கோவில் நடை சாத்தி விட்டால் மற்ற கோவில்கள் தரிசனம் பாதிக்குமே என்ற மனக் குழப்பத்துடன் பார்க்கலாம் இறைவனின் அருள் இருந்தால் சென்னிமலையின் தரிசனம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் சென்னிமலை நோக்கி பயணம் மேற்கொண்டோம்

சென்னிமலை அடிவாரத்தை அடைந்தபோது மணி 12:30 செக் போஸ்டில் இருந்த காவல் அதிகாரியிடம்  கோயில் குளோசிங் டைம் பற்றி கேட்டபோது தான் நிம்மதி வந்தது கோவில் முழு நேரமும் திறந்திருக்கும் என்று. பின்பு மொட்டை போட வேண்டும் என்றால் போடும் முன்பும் போட்டோ எடுக்க வேண்டும் மொட்டை அடித்த பிறகும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற புதிய வழக்கம் சென்னிமலை முருகன் கோயிலில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு   கூட்டம் குறைவாக இருந்தால் உடனடியாக
மொட்டை அடித்து குளித்துவிட்டு செக்யூரிட்டியில் போட்டோ எடுத்து விட்டு மலையேற ஆரம்பித்தோம் .மலைப்பாதை சுமாராக இருந்தது மழையினால் சாலையின் ஓரம் அறிக்கப்பட்டு இருந்தது பக்தர்கள் காரிலும் இருசக்கர வாகனத்திலும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். மேலே சென்று வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கூறி முதன்மை கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று பத்து ரூபாய் டோக்கன் பெற்று நேரடியாக உள்ளே நுழைந்தால் அங்கு ஒரு சிறு கும்பல் சிறப்பு தரிசனம் என்ற போர்வையில் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தது . சென்னிமலை முருகன் மிக அழகாக இருந்தார் அந்த அழகியை பார்த்து தரிசனம் செய்து கொண்டிருக்கும் பொழுது திரைப்படம் போடப்பட்டது. மனதில் சின்ன வருத்தம் முருகனிடம் விடை

பெற முடியவில்லை என்று ஐயர் திடீரென்று எல்லோரையும் உட்காருங்கள் அபிஷேகம் முடிந்த பிறகு தான் தரிசனம் என்றார் நாங்கள்  அங்கிருந்த சிறப்பு பகுதி உள்ளே சென்று தரையில் அமர்ந்து கொண்டு முருகனின் அனைத்து விதமான அபிஷேகங்களையும் கண்டு ரசித்து முருகனை எங்களை கண்ணுக்குள் நிறுத்தி வெற்றிவேல் முருக அரோகரா என்று முழு திருப்தியுடன் திவ்ய தரிசனம் பெற்று வெளியே வந்து பிரகாரங்களை  சுற்றி மொட்டைக்கு சந்தனம் நெற்றிக்கு சந்தன பட்டை பூசிக் கொண்டோம். இந்த மலைக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 1749 அடி உயரத்தில் 1320 படிப்பாதையில் கார் மூலம் இருசக்கர வாகனத்திலும் வரும் வசதி எங்கு உள்ளது படிக்கட்டு வழியாகவும் ஏறிவரும் பாதையும்

இருக்கின்றது . பின்புறம் உள்ள வள்ளி தெய்வானை சன்னதியில் தரிசனம் செய்து பின்பு ஓய்வில் பின்பகுதியில் படிக்கட்டு வழியாக பிண்ணாக்கு சித்தர் கோயிலுக்கு சென்றோம். ஒரு பத்து நிமிடம் நடந்து படியேறி சென்றால் அங்கு பின் நாக்கு சித்தர் வாழ்ந்த குகை உள்ளது அதன் உள் சென்று வழிபட்டு வெளியே வந்து தியானம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். இந்த இடத்தில் நேர்த்திக்கடன் பலியீட்டு பொங்கலிட்டு சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம் போல உள்ளதுஇந்த கோவில் அடிவாரத்தில் இருந்து எருதுகள் மூலம் படியேறி திருமஞ்சனம் எடுத்துச் சென்று முருகனுக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும் இது வழக்கமாக நடைபெறும் சிறப்பான

நிகழ்ச்சியாகும்இங்குதான் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்தது ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழ் சென்னிமலை முருகனைப் புகழ்ந்து ஐந்து பாடல்கள் பாடி முருகப்பெருமானின் படிக்காசு பெற்றுள்ளார் என்பது வரலாறு. இந்த முருகனின் சிலை காளை மாட்டின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டபோது முட்டிக்கு மேல் மிக  அழகாக செதுக்கப்பட்டிருந்தது  இடுப்பில் கீழ் பகுதி செதுக்கப்படாமல் இருந்ததால் அதை சரி செய்யும் போது கிளையின் காலிலிருந்து இரத்தம் வழிந்த காரணத்தால்  இன்றளவும் பழைய படியே உள்ளது என்பது வரலாறு. சிறப்பு திவ்ய தரிசனம் தந்த முருகனுக்கு நன்றி கூறி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

என்று கூறி மதியம் சுமார் 2:30 மணிக்கு மலையிலிருந்து கீழ் இறங்கி அடுத்த தலமான கொடுமுடி நோக்கி பயணம் செய்தோம். சென்னிமலையிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடுமுடிக்கு மதியம் சுமார் 3 மணிக்கு வந்து அடைந்தோம். காவிரி ஆற்றில் நன்றாக நீர் ஓடிக் கொண்டிருந்தது ஆற்றில் இன்பமான   இன்பமான குளியல் 20 நிமிடம் பின்பு குடத்தில் நீர் எடுத்து விநாயகருக்கு அபிஷேகம் செய்துவிட்டு கொடுமுடிநாதரை காண கோயிலுக்குள் சென்றோம். கோவிலில் கூட்டம் இல்லை நேரடியாக கொடுமுடிநாதரை திவ்ய தரிசனம் செய்தோம். இந்த கோவில் மும்மூர்த்தியான சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரம் சன்னிதி உள்ளது இறைவி வடிவுடை நாயகி தரிசனம் செய்து அடுத்து நடு கோபுரம் வழியாக விஷ்ணு மற்றும் பிரம்மா தரிசனம் செய்து நடுவாயிலுக்கும் வடபுறம் கொடுமுடி நாதரும் தென்புறம் வடிவுடை நாயகி கோபுரமும் உள்ளது. இங்கு சிவலிங்கம் சுயம்பு ஆகும். சிவலிங்கத்தின் ஆவுடை சதுர வடிவில் இருக்கும் அகத்தியர் இந்த தளத்தில் பூஜை செய்தபோது விரல் தடம் லிங்கம் மீது உள்ளது சிறப்பு. 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தின்  கீழ் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சண்டதியில் தரிசனம் செய்து பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் வீரநாராயண பெருமாள் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் சென்று வழிபட்டு மிகுந்த திருப்தியுடன் இறைவனுக்கு நன்றி கூறி வெளியே வந்தோம் ஒரு மணி

நேரம் இந்த தளத்திலிருந்து விட்டு அடுத்த தலமான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல தயாரானோம் . மணி அப்போது 4.30 . கொடுமுடியில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  திருச்செங்கோடு மலைப்பாதை வரை செல்ல குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது தேவைப்படும். மலைப்பாதை 5.55 க்கு மூடப்பட்டு விடும் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்தது.ஒரு மணி நேரம் பயணம் போக்குவரத்து மிகுந்த  கிராம சாலை  மலை பாதை ஆறு மணிக்கு அடைப்பு போன்ற பரபரப்புடன் திருச்செங்கோட்டினை காண வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் வேகமாகவும் லாகோமாகவும் காரினை செலுத்தி சரியாக 5:55க்கு பாதையில் உள்ளே

நுழைந்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு வந்தது. அதன் பிறகு நிம்மதியாக 2000 வருடங்கள் தாண்டியும் இன்றும் செந்நிறமாக காட்சியளிக்கும் மலை மூணு கிலோ மீட்டர் மலைப்பாதை வழியாக மேலே சென்று கோயிலை அடைந்தோம். கோவில் பிரகாரம் சுற்றி அர்த்தநாரீஸ்வரரை கண்குளிர தரிசனம் செய்தோம். மூர்த்தி ,தளம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பான சிறப்புடன் அமைந்த தலம் . இங்கு  அம்மையும் அப்பனும்மாக கலந்த நிலையில் இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இந்த தளத்தில் மட்டும்தான் .தேவாரம் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவாசகம் ,பெரிய புராணம் மற்றும் பல்வேறு நூல்களில் இடம் பெற்ற இந்த தளத்தில் இறைவனை தரிசனம் செய்து மேலும்

அர்த்தநாரீஸ்வரர் செங்கோட் வேலன் ஆதிகேச பெருமாள் வழிபாடு செய்து பரம திருப்தியுடன் அர்த்தநாரீஸ்வரர் முக்கிய கோபுரத்தின் முன் முன் காரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மலையில் இருந்து சிரிச்ச கோட்டின் அழகை ரசித்துவிட்டு அடுத்த தலமான  பவானி சங்கமேஸ்வரரை தரிசிக்க ஆயத்தமானோம். பவானி செல்ல 6:30 மணிக்கு திருச்செங்கோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர்  ஒன்னரை மணி நேர சாலை பயணம் இரவு நேரம் என்பதால் சற்று தாமதமும் ஏற்படும் அதே நேரத்தில் பவானி கோயில் 8 மணிக்கு சாத்தப்படும் என்ற பரபரப்புடன் எப்படியும் பவானி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்து இந்த இரண்டாவது யாத்திரை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்  வேகமாக பவானியை நோக்கி சென்றோம் பவானி கூகுள் மேப்பில் சரியான பாதை காட்டாததால் சற்று தாமதத்துடன் 7. 45 மணிக்கு கோயில் அடைந்தோம் காரை கோவில் முன்பு நிறுத்தும்போது மத்தளங்களின் ஒலி காதை ரீங்காரமிட்டது ஆஹா கோவில் மூடப் போகிறார்கள் என்று அவசர அவசரமாக இறங்கி ஓடி சன்னிதானம் அடைந்தால் மூலவர் கதவை அப்போதுதான் மூடினார்கள். வருத்தத்துடன் மூலவர் சன்னதியாவது சுற்றி வந்து  சங்கமேஸ்வரர் தரிசனம் கிடைக்கவில்லையே என்ன இறைவா இந்த சோதனை என்று நினைத்தபடியே மூலவர் பிரகாரத்தை சுற்றி வந்து மற்ற தெய்வங்கள் எல்லாம் வணங்கி வெளியே வந்தால் மத்தளங்களின்

சத்தம் விண்ணை பிளக்க இறைவன் பல்லாக்கில் அமர்ந்து பயணத்திற்கான ஊர்வல நிகழ்வு நடக்க ஆரம்பித்து இருந்தது. ஆஹா மிக அற்புதமான நிகழ்வு கைலாச இசை விண்ணை பிளக்க இறைவனின் பின்னாலே நாங்களும் கூட நடந்து சென்று அந்த அற்புத காட்சியினை உருவாக்கிக் கொண்டு இது போன்ற ஒரு நிகழ்வை வாழ்நாளில் நாங்கள் பார்த்தது கிடையாது . சயன உற்சவத்தை முதன்முதலாக அன்று தான் பார்க்கிறோம் இறைவனின் பயண அறைக்கு நேரே அமர்ந்து பெரியார்கள் இறைவனின் புகழ் பாட சிவனடியார்கள் சுற்றி நிற்க சிறப்பான செயல் உற்சவம் நடைபெற்றது . கைலாச இசையுடன் அந்த தரிசனம் செய்தது உள்ள வைக்க செய்யும் ஒரு அதிசய

நிகழ்ச்சி கிடைக்க வேண்டும் மிக்க மகிழ்ச்சி. கைலாச இசையை இதற்கு முன்பு நான் கேட்டதில்லை. மிகச் சிறப்பான இந்த தரிசனத்துடன் இறைவனின் சயன உற்சவம் எங்கள் கண்முன்னே நிறைவு பெற்றது. வில்வ பூக்களின் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் வெளியே வந்தோம்அருமையான தரிசனம் தந்த பவானி சங்கமேஸ்வரத்திற்கு நன்றி கூறி வெளியே வந்து வரிசையில் நின்று பால் பழம் பிரசாதம் பெற்று அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் . யாத்திரை சிறப்பாக நிறைவு பெற்றதில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. கோவில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன மாற்று வழியாய் வெளியே வந்தோம் பயணத்தின் ஆரம்பத்தில் காலையில் போரூரில் இறைவனின்


பள்ளியெழுச்சி  பயணம் முடியும் பொழுது பவானியில் இறைவனின் சைன உற்சவ தரிசனம் . ஆஹா அருமை அருமை என்ன இறைவனின் ஒரு அருமை எங்களுக்கு இப்படி ஒரு சிறப்பான அனைத்து கோயில்களும் தரிசனம் கொடுத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்.இரவு 9 மணிக்கு பவானியில் எங்கள் ஒரு நாள் 274 சிவாலய தரிசனம் இரண்டாம் சுற்றினை மன நிறைவுடன் நிறைவு செய்தோம் .இறைவனுக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் இரவு உணவை முடித்துவிட்டு சேலம் வழி வரும் வழியில் நாள் முழுக்க வண்டியினை ஓட்டி பரபரப்பாய் அனைத்து கோயில்களையும் குறிப்பிட்ட நேரத்தில் இறையின் அருளால் தரிசனம் கிடைத்த சந்தோஷம்

அதனால் ஏற்பட்ட களைப்பு முதல் நாள் இரவு 10 மணியிலிருந்து அடுத்த நாள் இரவு 9 மணி  வரை 9 கோவில்களில் தரிசனம் சுமார் 800 கிலோ மீட்டர் சுற்றிய களைப்பு பயணத்தின் பாதுகாப்பிற்காக சற்று ஓய்வெடுப்பதற்காக ஒரு எரிபொருள் நிரப்பும் இடத்தில் ஒரு இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்தோம்.பின்பு அங்கிருந்து ஓய்வெடுத்த பிறகு கிளம்பி சுமார் 17.06.2024 காலை 3.30 AM  ஓசூர் வந்தடைந்தோம். இந்த 274 ஆலய தரிசன வரிசையில் இரண்டாம் சுற்றில் அனைத்து கோயில்களையும் சிறப்பாக தரிசனம் கொடுத்து அருள் கொடுத்த இறைவனுக்கு நன்றி... நன்றி... நன்றி...

ந.பலசந்தர் 

ஓம் நமச்சிவாய

திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

274 பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம்